Pregnant Wife Murder Case (Photo Credit: @ndtv X)

ஆகஸ்ட் 25, மேட்சல் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் காமரெட்டிகுடா பகுதியை சேர்ந்தவர் மகேந்திர ரெட்டி (வயது 30). டாக்சி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இவர், அதே பகுதியை சேர்ந்த சுவாதி யாதவ் (வயது 22) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் கடந்த ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், கடந்த 25 நாட்களுக்கு முன்பு மேட்சல் மாவட்டத்தில் உள்ள உப்பலுக்கு குடிபெயர்ந்தனர். மனைவி சுவாதி கர்ப்பமாக இருந்தார். திருமணம் செய்த ஆரம்பத்தில் இருவரும் மகிழ்ச்சியாக இருந்தபோதிலும், குடும்ப தகராறு காரணமாக மோதல்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது. மனைவி கழுத்தை அறுத்துவிட்டு, வாலிபர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

மனைவி கொடூரக் கொலை:

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 23) சண்டையின் போது கர்ப்பிணி சுவாதியை கழுத்தை நெரித்து கொன்று, பின்னர் பிளேடைப் பயன்படுத்தி அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். பின், பிரதாப்சிங்கரம் அருகே உள்ள மூசி ஆற்றில் அவரது கைகளையும் கால்களையும் வீசிவிட்டு, அவரது உடலை தனது அறையில் வைத்திருந்தார். இதனையடுத்து, சுவாதி காணவில்லை என உறவினர்கள் அளித்த தகவலின் பேரில், காவல்துறையினர் மகேந்திர ரெட்டியிடம் விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணை:

விசாரணையில், கர்ப்பிணி மனைவியை அவர் கொலை (Murder) செய்தது தெரியவந்தது. இதுவரை, சுவாதியின் உடலின் உடல் பகுதி மட்டுமே மீட்கப்பட்டுள்ளது. மற்ற உடல் பாகங்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மகேந்திர ரெட்டியை கைது செய்துள்ளனர். மேலும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.