Justice BR Gavai as Chief Justice of India (Photo Credit: @IamVivekkolhe X)

மே 14, டெல்லி (Delhi News): உச்ச நீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா 2024ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பதவி ஏற்றார். அவரது பதவிக்காலம் நேற்றுடன் (மே 13) முடிவுக்கு வந்தது. இதனையடுத்து, இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை (வயது 65) நியமித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி உத்தரவிட்டார். பரோட்டா கேட்டு ஹோட்டல் உரிமையாளரை அடித்து உதைத்த இளைஞர்கள்.. பசியால் அதிர்ச்சி சம்பவம்.!!

உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி:

அதன்படி, குடியரசு மாளிகையில் இன்று (மே 14) நடக்கும் விழாவில் உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை (BR Gavai) குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற கவாய்க்கு பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

பி.ஆர்.கவாய்:

இவர், அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான வழக்குகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 1992ஆம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து, 2003இல் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2005இல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார். கடந்த 2019ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று உச்சநீதிமன்ற நீதிபதியானார். உச்சநீதிமன்றம் வழங்கிய பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளின் பகுதியாக பி.ஆர். கவாய் இருந்துள்ளார்.