
மே 13, கொல்லம் (Kerala News): கேரள மாநிலத்தில் உள்ள கொல்லம் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் அமுல் குமார். நேற்று இரவு இவரது ஹோட்டலுக்கு இளைஞர் ஒருவர் பரோட்டா சாப்பிட வந்த நிலையில், கடை பூட்டும் நேரம் என்பதால் வேறு எங்காவது சென்று பரோட்டா சாப்பிடும்படி ஹோட்டல் உரிமையாளர் கூறியதாக தெரிய வருகிறது.
ஹோட்டல் உரிமையாளர் மீதி தாக்குதல் :
முன்னதாகவே பசியில் இருந்த இளைஞர் ஆத்திரமடைந்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து, 15 நிமிடம் கழித்து தனது நண்பருடன் மதுபோதையில் மீண்டும் ஹோட்டலுக்கு வந்துள்ளார். வாகனத்திலிருந்து இறங்கிய இருவரும் ஹோட்டல் உரிமையாளரிடம் பரோட்டா கேட்டால் பரிமாற மாட்டாயா? எனக் கூறி அடித்து உதைத்துள்ளனர். Trending Video: இரக்கமில்லாத நபரால் வாயில்லா ஜீவனுக்கு நேர்ந்த கொடுமை.. ஆட்டோவில் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட நாய்.!
இளைஞர்களுக்கு போலீஸ் வலைவீசு :
இதில் அமுலுக்கு முகம் மற்றும் தலையில் காயம் ஏற்பட்ட நிலையில், அவ்வழியாக காவல்துறையினர் வந்ததால் இருவரும் தங்களது வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஹோட்டல் உரிமையாளரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்து, தாக்குதல் நடத்திய இளைஞர்களுக்கு வலை வீசியுள்ளனர்.