Geetha Rabari | PM Narendra Modi (Photo Credit: YouTube / Facebook)

ஜனவரி 06, புதுடெல்லி (New Delhi): உத்திரப்பிரதேசம் மாநிலம் அயோத்தி, ஸ்ரீ ராம ஜென்மபூமியில் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் (Ayodhya Dham Ram Mandir) கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் பணிகள் முடிய இன்னும் சில ஆண்டுகள் ஆகும் எனினும், கோவிலின் முக்கிய விகார பணிகள் நிறைவுபெற்றதை தொடர்ந்து, ஜனவரி 22ம் தேதி ராமர் சிலை நிறுவுதல் மற்றும் கும்பாவிஷேக பணிகள் நடைபெறுகிறது. இதனால் அயோத்தி மாநகரம் விழாக்கோலம் கண்டுள்ளது. முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது.

புத்துயிர் பெற்ற அயோத்தி நகரம்: அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலுக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள ராம பக்தர்கள் வருவார்கள் என்பதால், அவர்கள் எளிதில் கோவிலை அணுகும் வகையில் சர்வதேச விமான நிலையம், சர்வதேச தரத்திற்கு இணையான நவீனமயமாக்கப்பட்ட இரயில் நிலையம் சமீபத்தில் திறக்கப்பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் இந்திய அளவில் உள்ள முக்கிய அரசியல்கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள், திரைத்துறை பிரபலங்கள் நேரில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Hydroxychloroquine Death: கொரோனவை கட்டுப்படுத்த எடுத்துக்கொள்ளப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளால் 17,000 மரணங்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல் அம்பலம்.! 

திறப்பு விழாக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்: ஜனவரி 3ம் தேதி முதல் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும் அயோத்தி சென்று வர சிறப்பு இரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களை அயோத்தி அழைத்துசெல்லவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பக்தர்கள் புதிய பாடலை கேட்டு மகிழும் வகையில் ராம் ஆயங்கே (ராமர் வருகிறார்) என்ற பாடல் வெளியாகி இருந்தது. இப்பாடல் தனது கண்களில் கண்ணீரை ஏற்படுத்தி, மனதின் உணர்ச்சியை நிரப்புவதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

ராமர் வருகிறார் பாடல்: இந்நிலையில், ராமர் வீட்டிற்கு வருகிறார் (Shree Ram Ghar Aaye) என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ராம் லாலா நாளுக்காக ஒவ்வொரு குடும்பமும் காத்திருக்கிறது. அவரை வரவேற்க கீதாபென் ரபாரி பாடியுள்ள பாடல் உணர்ச்சிகரமானது என தெரிவித்துள்ளார்.