ஜனவரி 07, வாஷிங்க்டன் (Washington DC): கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ், உலகளவில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளின் போது உச்சகட்ட தாக்குதலை வெளிப்படுத்திய கொரோனா வைரஸ் பரவல், மக்களை அதிகளவு பாதித்தது. தொடக்கத்தில் வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத காரணத்தால், உலகளவில் உயிரிழப்புகள் எண்ணிக்கை 6,965,146 ஆக உயர்ந்தது.
உலகளவில் அதிக பாதிப்புகளை எதிர்கொண்ட நாடு: அமெரிக்கா கொரோனா விவகாரத்தில் தொடக்கத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட்டாலும், அன்றைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் மீது கடும் விமர்சனம் முன்வைத்தார். அமெரிக்கர்கள் சீனாவுக்கு செல்ல பயணத்தடையும் விதிக்கப்பட்டபோதிலும், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் ட்ரம்ப் தனது அறிவிப்பில் இருந்து பின்வாங்கி அமைதியாகினார். அதனைதொடர்ந்தே கொரோனா அந்நாட்டில் கடுமையாக அதிகரித்தது.
தற்காலிகமாக கைகொடுத்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின்: திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம் என அமெரிக்காவில் மட்டும் 1,191,065 பேர் மரணம் அடைந்தனர். அங்குள்ள ஆய்வாளர்கள் முதலில் மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளால், கொரோனாவின் வீரியம் கட்டுப்படும் என கண்டறிந்தனர். இதனையடுத்து, மலேரியாவுக்கான மருந்துகளை அதிகம் உற்பத்தி செய்யும் இந்தியா உட்பட சில நாடுகளிடம் இருந்து டொனால்ட் ட்ரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் (Hydroxychloroquine) மாத்திரைகளை பெற்று தனது நாட்டில் விநியோகம் செய்தார். Maldives Websites Down: மாலத்தீவு வெளியுறவுத்துறை, சுற்றுலா உட்பட முக்கிய இணையப்பக்கங்கள் முடக்கம்: அரசுத்துறைக்கு அதிர்ச்சி.!
ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்: இந்நிலையில், பிரெஞ்சு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், கொரோனாவை குணப்படுத்த அமெரிக்கா உட்பட சில நாடுகளால் பரிந்துரை செய்யப்பட்ட ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகள் 17 ஆயிரம் பேரின் உயிரை காலப்போக்கில் பறித்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பயோமெடிசின் & பார்மகோதெரபியின் இதழ் ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்தியவர்களுக்கு இதய பாதிப்பு, தசை பலவீனம் போன்ற பக்கவிளைவு பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
17 ஆயிரம் பேரின் மரணத்திற்கு வழிவகுத்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின்: இதனால் அமெரிக்காவில் 12,739 பேரும், ஸ்பெயினில் 1,895 பேரும், இத்தாலியில் 1,882 பேரும், பெல்ஜியத்தில் 240 பேரும், பிரான்சில் 199 பேரும், துர்கியில் 95 பேரும் உயிரிழந்து இருக்கின்றனர். அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து தரக்கட்டுப்பாட்டு நிறுவனம், கொரோனா காலத்தில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துகளுக்கு அவசர அனுமதி வழங்கிவிட்டு, பின் ஜூன் 15, 2020 அன்று அதனை இரத்து செய்து உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அனுமதி வழங்கியது, பின்னர் மேற்கொண்ட ஆய்வுகளில் அவை ரத்து செய்யப்பட்டும் இருந்தது.