San Rachel Suicide Case (Photo Credit : @manoramanews X)

ஜூலை 14, புதுச்சேரி (Puducherry News): புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காராமணிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் சான் ரேச்சல் என்ற சங்கர பிரியா (வயது 26). சிறுவயதிலேயே தாயை இழந்து வளர்ந்து வந்த ரேச்சல் தந்தையின் அரவணைப்பில் கவனிக்கப்பட்டுள்ளார். தனது நிறத்தின் காரணமாக சிறுவயது முதல் பல அவதூறுகளை எதிர்கொண்டவர் தடைகளை உடைத்து பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் வகையில் விழிப்புணர்வு செய்து வந்தார். தொடர்ந்து மாடலிங் துறையில் கால் பதித்தவர், புதுச்சேரி 2020, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, குயின் ஆஃப் மெட்ராஸ் 2022, மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் இந்தியா 2023 போட்டியில் கலந்து கொண்டு பல விருதுகளை பெற்றுள்ளார்.

தற்கொலை செய்ததற்கான காரணம் :

சமீபத்தில் இவருக்கு திருமணமும் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் இவர் அதிக தூக்க மாத்திரை மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பேஷன் ஷோ நிகழ்ச்சிகள் நடத்த அதிக கடன் பெற்றதாகவும், அதனால் ஏற்பட்ட கடன் மற்றும் பிற பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாகவும் காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளக்காதலனுடன் ஓடிய மனைவி.. பாலில் குளித்து விவாகரத்தை கொண்டாடிய கணவர்.! 

சிகிச்சை பலனின்றி மரணம் :

கடந்த சில வாரங்களாகவே இது தொடர்பான கடுமையான மன அழுத்தத்தில் இருந்தவர், கடந்த ஜூலை 5ஆம் தேதி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ரேச்சலின் தந்தை காந்தி மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரண்டு நாட்களுக்குப் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டவரின் உடல்நிலை மீண்டும் மோசமானதால் உயர் சிகிச்சைக்காக ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவு புதுச்சேரியை மட்டுமல்லாது ஒட்டுமொத்த மாடலிங் துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:

டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..