MK Stalin | Rahul Gandhi (Photo Credit: @MKStalin X / @RahulGandhi X)

ஜனவரி 23, கோட்டூர்புரம் (Chennai News): தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், இன்று காலை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் நடைபெற்ற விழாவில், "இரும்பின் தொன்மை" எனும் நூலை வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து, கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டி, கீழடி இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் அவர் வெளியிட்டு இருந்தார். முக்கிய அறிவிப்பு: தமிழ்நாட்டில் தொடங்கிய பொற்காலம்.. சான்று கொடுத்த அமெரிக்கா.. ஆதாரத்துடன் வெளியிட்ட முதல்வர்.! 

இரும்பின்‌ காலம்‌ தமிழ்நாட்டில் தொடக்கம்:

அதாவது, தமிழ்‌ நிலப்பரப்பில்‌ இருந்துதான்‌ இரும்பின்‌ காலம்‌ தொடங்கியது என்பதால், மாபெரும்‌ மானுடவியல்‌ ஆய்வு திட்டத்தை அறிவித்தார். சுமார் 4 ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன்பே உருக்கு இரும்பு தொழில்நுட்பம்‌ தமிழ்‌ நிலத்தில்‌ இருந்துள்ளது என்பதால், தற்போதைய ஆய்வுகள் இரும்பின் அறிமுகத்தை வேறொரு பரிணாமத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இதனால் இதுகுறித்து ஆய்வு செய்ய அறிவிப்பு வெளியிடுவதாக கூறினார்.

ராகுல் காந்தி பெருமிதம்:

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, "இந்தியாவின் செம்மையான பாரம்பரியம், உலகுக்கு ஊக்கமளிக்கிறது. தமிழ்நாட்டில் தொல்பொருள் கண்டுபிடிப்பு 5300 ஆண்டுகளுக்கு முன் இருப்பது, இரும்பின் பயன்பாடுகளை வெளிப்படுத்துகிறது. இரும்பு யுகத்தில் இந்தியாவின் ஆரம்பகட்ட முன்னேற்றங்களை இது எடுத்துரைக்கிறது. தமிழ்நாட்டின் பங்களிப்பு நமது தேசம் முக்குவதும் புதுமை, ஒற்றுமையை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், சமூகத்திலும் செழித்து வளரும் இந்திய உணர்வை நாம் கொண்டாடுவோம்" என கூறியுள்ளார்.

இரும்பின் தொன்மைக்கு புகழாரம் தெரிவித்துள்ள ராகுல் காந்தி: