TNEB | Job Scam (Photo Credit: Wikipedia / Pixabay)

செப்டம்பர் 13, தாம்பரம் (Chennai News): சென்னையில் உள்ள பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். மனைவி மலர். சந்தோஷுக்கு புனிதா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்படவே, இருவரும் மரியாதையை நிமித்தமான நண்பர்களாக பழகி வந்துள்ளனர்.

இந்நிலையில், புனிதா தன்னை திருமுடிவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் கிளார்க் என அறிமுகம் செய்து சந்தோஷிடம் தனது வேலைகள் குறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தனது மனைவி நீண்ட காலமாக வேலைதேடி வரும் நிலையில், மின்வாரியத்தில் ஒப்பந்த பணியாவது கிடைக்குமா? என கேட்க, பணம் இருந்தால் நிரந்தர பணியே வாங்கிவிடலாம் என புனிதா கதை கூறி இருக்கிறார்.

இதனை நம்பிய சந்தோசும், தன்னிடம் இருந்த சம்பாத்திய பணம் மற்றும் நகைகள் ஆகியவற்றை விற்பனை செய்து ரூ.3 இலட்சம் பணம் கொடுத்துள்ளார். அப்போது, புனிதா பல காலிப்பணியிடத்தை நிரப்ப தற்போது கூறி வருகிறார்கள்.

பலரிடமும் பணம் வாங்கிக்கொடுத்தால், அவர்களுக்கும் வேலை வாங்கி தருகிறேன் என புனிதா கூறியுள்ளார். மோசடி வலையின் உண்மைத்தன்மை அறியாமல் சந்தோஷும் தனக்கு தெரிந்தவர்கள் என 28 பேரிடம் தலா ரூ.3 இலட்சம் வீதம் என மொத்தமாக ரூ.71 ரொக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. Justin Trudeau Returns Canada: 36 மணிநேர தாமதத்திற்கு பிறகு ஜஸ்டின் ட்ரூடோ நாடு திரும்புகிறார்: விமானம் சரி செய்யப்பட்டு புறப்பட்டது.! 

அதேபோல, ரூ.12 இலட்சம் தனியாக வாங்கிக்கணக்கிலும் செலுத்தப்பட்டுள்ளது. மோசடி பணத்தில் புனிதா உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில், பணியானை வராததால் பணம் கொடுத்த பலரும் மின்வாரிய அலுவலகத்தில் சென்று விசாரித்துள்ளனர்.

அப்போது, அவர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக மட்டுமே வேலைபார்த்து வருகிறார் என்பது அம்பலமானது. இதனையடுத்து, பணம் கொடுத்த பலரும் தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், "எங்களிடம் புனிதா பணம் வாங்கும்போது அண்ணா, அண்ணி நீங்கள் தான் எல்லாமே. உங்களுக்காக நான் வேலை வாங்கி தருகிறேன் என பல ஆசை வார்த்தை கூறினார்.

அவரை நம்பி நாங்கள் எங்களுக்கு தெரிந்தவர்கள் என பலரையும் கடனாளி ஆக்கி மனப்பிரச்சனையை கொண்டு வந்துவிட்டோம். எங்களிடம் மீதமிருந்த சேமிப்பு, நகையை அடகு வைத்து, விற்பனை செய்து பணத்தை தந்தோம். இன்று நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலைமை ஆகிவிட்டது" என தெரிவித்தனர்.

அரசு வேலைகள் எங்கும் இதுபோல் விற்கப்படுவது இல்லை; வீணாக மூன்றாம் நபரை நம்பி பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்.