Reels Video Attempt Failure (Photo Credit: Twitter)

ஜூலை 26, உதய்பூர் (Rajasthan News): தென்மேற்கு பருவமழை (Southwest Monsoon) வடமாநிங்களில் உச்சம் பெற்றுள்ள காரணத்தால் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு நடப்பு வாரத்தில் கனமழை எச்சரிக்கை (Heavy Rain Alert) விடுக்கப்பட்டு இருக்கிறது.

அம்மாநிலங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். தேசிய மீட்பு படையினரும் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

இந்நிலையில், இராஜஸ்தான் மாநிலத்தில் (Rajasthan Rains) பெய்துவரும் கனமழை காரணமாக, அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல கிராமங்கள் மற்றும் நகரங்களை இணைக்கும் சாலை வெள்ள நீரினால் சூழப்பட்டுள்ளது. சில ஆர்வக்கோளாறு இளைஞர்கள் அதனை வீடியோ எடுக்க நினைத்து ஆபத்தில் சிக்குகின்றனர். Viral: ஒரேவார்த்தை பிழையானதால் பதறிப்போன வங்கி அதிகாரி; நூறுக்கும், கணவருக்கும் வித்தியாசம் தெரியாததால் சோகம்.!

இவ்வாறாக இராஜஸ்தானில் உள்ள உதய்பூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், ஆற்று குறுக்கே செல்லும் தரைப்பாலத்தில் நின்று வெள்ளம் செல்வதை வீடியோ எடுத்துள்ளனர். அப்போது, திடீரென நீரின் வரத்து அதிகமாகி மூன்று பேர் அங்கேயே சிக்கிக்கொண்டு உயிருக்கு போராடியுள்ளனர்.

உள்ளூர் மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், விரைந்து வந்த அதிகாரிகள் கிரேன் உதவியுடன் இளைஞர்களை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். இதுபோன்ற நடவடிக்கையில் இளைஞர்கள் அலட்சியமாக ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.