PM Modi Gifted by Team India (Photo Credit: Twitter)

அக்டோபர் 11, புது டெல்லி (Sports News): ஆசிய நாடுகள் விளையாட்டுப்போட்டிகள் தொடர் 2023, சீனாவில் உள்ள ஹாங்சோ மாகாணத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முடிவில், 28 பிரிவுகளில் விளையாடிய இந்திய அணியினர், 107 பதக்கங்களை வென்று இந்திய மண்ணுக்கு திரும்பினர்.

28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கல பதக்கங்களை இந்திய சிங்கங்கள் தட்டிச்சென்றது. இது சர்வதேச அளவில் இந்தியாவை திரும்பிப்பார்க்கவும் வைத்தது. இந்தியாவுக்காக விளையாடி வெற்றிகண்ட விளையாட்டு வீரர்களை, பிரிவு வாரியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து பாராட்டுகளை தெரிவித்து வருகிறார். Animal Movie Nee Vaadi Song: அனிமல் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ரன்பீர் - ரஷ்மிகாவின் முத்த காட்சிகளால் கொஞ்சும் ரசிகர்கள்.! 

இந்நிலையில், புதுடெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் (Major Dhyan Chand National Stadium) வைத்து நடைபெற்ற இந்திய கிரிக்கெட் அணியினர் பாராட்டு விழா நிகழ்ச்சியில், ஆசிய நாடுகள் விளையாட்டுப்போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கிரிக்கெட் வீரர்கள், தங்களின் கையெழுத்து பதிவு செய்யப்பட்ட கிரிக்கெட் பேட்டை பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வழங்கினர். பிரதமர் மோடியும் அதனை மனதார ஏற்றுக்கொண்டு வீரர்களை பாராட்டினார்.

இன்று உலகக்கோப்பை 2023 தொடரில், இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் அருண் ஜெட்லீ கிரிக்கெட் மைதானத்தில் வைத்து மோதுகின்றன. மதியம் 2 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா, ஆப்கானிஸ்தானுடன் இரண்டாவது போட்டியை எதிர்கொள்கிறது.