Demonetarized Rs. 500, Rs.1,000 INR / Rs. 2000 INR Money (Photo Credit PTI / Wikipedia)

மே 19, மும்பை (Mumbai): மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப (Rs.2000 INR Withdrawn) பெறுவதாக இன்று அறிவிப்பு வெளியிட்டது. இதனால் நாம் ரூ.2000 நோட்டுகளை விரைவில் பயன்படுத்த இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாம் ரூ.2000 பணத்தை மாற்ற விரும்பும் பட்சத்தில், ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லது தபால் நிலையத்தில் அதனை மாற்றிக்கொள்ளலாம்.

அதன்படி, நாளொன்றுக்கு ரூ.20,000 மதிப்புள்ள நோட்டுகளை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை சேகரிக்கவும், மேற்படி புழக்கத்திற்கு ரூ.2000 நோட்டுகளை வழங்கப்பட வேண்டாம் என்றும் வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டு, அதனை மாற்றிக்கொள்ள அறிவிப்பு வெளியிடப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக ரூ.10 முதல் அதிகபட்சமாக ரூ.200, ரூ.500, ரூ.2,000 புதிய ரூபாய் நோட்டுகள் அமலுக்கு வந்தன. Delhi Shocker: கல்லூரி வளாகத்தில் காதலியை சுட்டுக்கொன்று, தானும் தற்கொலை செய்த மாணவர்; பரிசை வாங்க மறுத்ததற்காக பயங்கரம்..!

இவற்றில் ரூ.2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் சர்ச்சையை ஏற்படுத்தி, பின்னாளில் அது அச்சிடப்படுவது நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சுழற்சி முறையில் பெறப்படும் ரூ.2000 நோட்டுகள் படிப்படியாக திரும்ப பெற்றுக்கொள்ளப்படும். செப்டம்பர் மாதம் 30, 2023ம் தேதிக்குள் மக்கள் ரூ.2000 நோட்டுகளை வங்கிகள் வாயிலாக மாற்றிக்கொள்ளலாம்.

வங்கிகளில் இதற்கான பிரத்தியேக கவுண்டர்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, விரைந்து ரூபாய் நோட்டுகளை மாற்ற வழிவகை செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20000 வரையில் தனிநபர் தன்னிடம் உள்ள பணத்தை மாற்றிக்கொள்ளலாம். பெரு நிறுவனங்கள் ரூ.20000 வரை பணத்தை மாற்ற விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2016ல் அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2000 நோட்டுகள், 2018 - 2019 இடைப்பட்ட காலங்களில் அச்சடிப்பது நிறுத்தம் செய்யப்பட்டது. 89% அளவிலான ரூ.2000 நோட்டுகள் மார்ச் மாதம் 2017க்குள் வெளியிடப்பட்ட நிலையில், அவை 4 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மீண்டும் பெறப்பட்டது.