7 Terrorists Shot Dead (Photo Credit: @ANI X)

மே 09, சம்பா (Jammu Kashmir News): ஜம்மு காஷ்மீரில் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்று இரவு, பாகிஸ்தான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்தியா வான் படைத் தாக்குதல் மூலம் அதனை தகர்த்துள்ளது. Govt Bans Pakistani Content on OTT Platforms: ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு.. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் அதிரடி..!

7 பேர் சுட்டுக்கொலை:

இந்நிலையில், மே 9, 2025 அன்று, ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லையில் ஊடுருவ முயன்ற, 7 பயங்கரவாதிகளைக் பாதுகாப்பு படையினர் (BSF) சுட்டுக்கொன்றனர். மேலும், பாகிஸ்தான் போஸ்ட் தண்டருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. எல்லையைத் தாண்டி பாகிஸ்தான் போஸ்ட் இருப்பதைக் காட்டும் காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

வீடியோ இதோ: