Lawyer Dies Of Heart Attack (Photo Credit: @telanganaawaaz X)

பிப்ரவரி 18, ஐதராபாத் (Telangana News): தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் (Telangana High Court) இன்று (பிப்ரவரி 18) மதியம், மூத்த வழக்கறிஞர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார். நீதிமன்றம் எண். 21 இல் நீதிபதி முன் தனது வாதங்களை முன்வைத்துக்கொண்டிருந்த வழக்கறிஞர் பி. வேணுகோபால் ராவ், திடீரென மாரடைப்பால் (Heart Attack) நீதிமன்ற அறையில் மதியம் 1.30 மணியளவில் சரிந்து விழுந்தார். Woman Rape Case: ஆபாச புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டி, இளம்பெண் பலாத்காரம்; பிரபல யூடியூபர் அதிரடி கைது..!

வழக்கறிஞர் மாரடைப்பால் மரணம்:

தகவல்களின்படி, நீதிமன்ற அறையில் இருந்த மற்ற வழக்கறிஞர்கள் அவரை மீட்டு, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். வழக்கறிஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உயர் நீதிமன்றத்தின் அனைத்து அமர்வுகளிலும், நீதிபதிகள் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்தனர். அனைத்து நீதிமன்ற விசாரணைகளையும் நீதிபதிகள் நாளைக்கு ஒத்திவைத்தனர்.