அக்டோபர் 05, சிக்கிம் (Sikkim Cloud Burst Floods): சிக்கிம் மாநிலத்தில் உள்ள டெஸ்ட்டா நதியில், மேகவெடிப்பு காரணமாக பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர பகுதிகள் நீரின் பிடியில் சிக்கியது. இந்த சம்பவத்தில் 23 இராணுவ வீரர்கள் மாயமாகினர்.
கிட்டத்தட்ட வெறும் 30 நிமிடங்களில் கோரத்தாண்டவ அழிவை ஏற்படுத்திய வெள்ளத்தின் பிடியில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், மாயமான 23 இராணுவ வீரர்கள் உட்பட 102 பொதுமக்கள் மயமாகி இருப்பதாகவும், 26 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Jagathrakshakan IT Raid: முன்னாள் மத்திய இணை அமைச்சர், திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு-அலுவலகங்களில் வருக்குமானவரித்துறை சோதனை.. துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் சம்பவம்.!
சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுலாவுக்கு சென்ற 3000-க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் அங்கிருந்து வெளியேற இயலாமல் வெவ்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர்.
மக்களுக்கு தேவையனை உதவிகளை மாநில அரசும், தேசிய மீட்பு படை அதிகாரிகளும் செய்து வருகின்றனர். முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.