DMK MP Jagathrakshakan | Income Tax Department Logo (Photo Credit: Wikipedia)

அக்டோபர் 05, சென்னை (Chennai News): திமுக நாடாளுமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெகத்ரட்சகன் (S. Jagathrakshakan) வீடு, அலுவலகங்கள், அவர்க்கு சொந்தமான பல இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று காலை முதலாகவே துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை அதிகாரிகள் பாதுகாப்போடு வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. பல்வேறு காலங்களில் மத்திய இணை அமைச்சராக பதவி வகுத்துள்ள ஜெகத்ரட்சகன், திமுகவின் முக்கிய புள்ளிகளில் ஒருவராவார்.

அரசியலில் பல உயர்பொறுப்புகளில் இருந்துள்ள ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமாக பல கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை உட்பட சொத்துக்கள் இருக்கின்றன. சென்னையில் உள்ள 40 இடங்களில் தற்போது வருமான வரித்துறை சோதனை நடைபெறுவதாக தகவல் தெரியவந்துள்ளது. Whats App Updates: வாட்ஸ ஆப் சேனல்களை எளிதில் கையாள புதிய அப்டேட்.! தானாக டெலிட் ஆகும் அற்புதமான அம்சம்.!

அடையாறு வீடு, தி.நகர் அக்கார்ட் நட்சத்திர விடுதி, தாம்பரம் பாரத் பல்கலைக்கழகம், பல்லாவரம் வேலா மருத்துவமனை, பூந்தமல்லி சவிதா மருத்துவமனை, பள்ளிக்கரணை பாலாஜி கல்வி நிறுவனம் உட்பட சென்னை மற்றும் புறநகர் பகுதியில் 40 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

40 இடங்களையும் சேர்த்து 1000 க்கும் அதிகமான அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல நிறுவனங்களை நடத்தி வரும் ஜெகத்ரட்சகன், சரியாக வருமான வரி செலுத்தாததே சோதனைக்கு காரணம் என கூறப்படுகிறது.