Earthquake File Pic (Photo Credit: Twitter)

ஜனவரி 21, புதுடெல்லி (New Delhi): 2024ம் ஆண்டில் மே மாதம் வரையில் உலகளாவிய இயற்கை பேரிடர் சார்ந்த அழிவுகள் அதிகம் ஏற்படும் என ஜோதிடத்தின் வாயிலாக கணிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கையின் பஞ்சபூத பேரிடர்களை மக்கள் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் எனவும் ஜோதிட ஆய்வாளர்கள் அறிவுறுத்தி வருகின்ற்னர். அதனை முதற்கட்டமாக உறுதி செய்யும்பொருட்டு, ஜப்பானில் புத்தாண்டு அன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 200 க்கும் அதிகமானோர் பலியாகினர். சுனாமி அலைகள் 1 மீட்டர் உயர அளவில் எழுந்து தாழ்ந்தது.

உலகளவில் பதற்றத்தை தரும் நிலநடுக்கங்கள்: கடந்த 2023ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் துருக்கி - சிரியாவை மையமாக வைத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணித டச்சு நிலவியல் ஆய்வாளர், அடுத்தகட்டமாக ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் - இந்தியாவை மையமாக வைத்து பயங்கர நிலநடுக்கம் ஏற்படும் என எச்சரித்து இருந்தார். அதனை உறுதி செய்யும்பொருட்டு ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நேபாளம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் பயங்கர நிலநடுக்கங்கள் அவ்வப்போது ஏற்பட்டன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் இதனால் உயிர் மற்றும் பொருட்சேதங்களும் ஏற்பட்டன. Microsoft Report: மைக்ரோசாப்ட் மூத்த அதிகாரிகளின் இ-மெயில் கணக்குகள் முடக்கம்: ரஷிய ஹேக்கர்கள் மீது மைக்ரோசாப்ட் குற்றசாட்டு.! 

இந்நிலையில், பாகிஸ்தானில் தொடங்கி அரபிக்கடல் வழியே இந்திய பெருங்கடலில் பயணித்து, ஆஸ்திரேலியாவை கடந்து அண்டார்டிகா வரை செல்லும் நிலநடுத்தட்டுகள் எனப்படும் டெக்ட்டானிக் பிளேட்டில் இன்று பயங்கர நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு இந்திய முகடு எனப்படுவதை ஆங்கிலத்தில் (Southeast Indian Ridge) என்று அழைப்பார்கள்.

அமெரிக்கா & ஜப்பானின் நிலை: இவ்வாறான நிலநடுத்தட்டுகள் மீது நேரடியாக ஏற்படும் நிலநடுக்கம், கட்டாயம் பெரிய அழிவுகளை ஏற்படுத்தவல்லது. கடலுக்குள் இவை ஏற்படும் பட்சத்தில் சுனாமி போன்றவையும் உண்டாகலாம். இதற்கு சிறந்த உதாரணமாக ஜப்பானையும், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின் முகடையும் கூறலாம். அலாஸ்கா குளிர்பிரதேசம் என்பதால் மக்கள் எண்ணிக்கை குறைவு, அதே வேளையில் ஜப்பானில் நிலைமை வேறு. இங்குள்ள நிலநடுக்கம் இந்திய பெருங்கடலில் இருக்கும் நிலநடுத்தட்டு முகட்டில் நேரடியாக ஏற்பட்டால் கட்டாயம் அது பெரிய விளைவுகளை தரலாம்.