ஜனவரி 22, புதுடெல்லி (New Delhi): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தியில், இன்று (ஜனவரி 22, 2024) ராமர் கோவில் (Ayodhya Ram Mandir Inauguration) கும்பாவிஷேகம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக இந்தியாவெங்கும் இருக்கும் திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல்கட்சியினர், ராம பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அனைவரும் ராமர் விழாவுக்காக அயோத்தி சென்றுள்ளனர்.
புத்துயிர் பெற்ற அயோத்தி: அயோத்தி மட்டுமல்லாது ஒட்டுமொத்த உத்திரபிரதேசம் மாநிலத்தின் முக்கிய நகரங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில், கோவிலில் இருந்து 8 கி.மீ தொலைவில் சர்வதேச விமான நிலையம், இரயில் நிலையம் என அயோத்தியே புத்துயிர் பெற்று இருக்கிறது. IND VS ENG Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தீவிரமாக தயாராகும் ஹிட்மேன்; அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தமிழ்நாடு அரசின் உத்தரவு: இன்றைய நாளில் உள்ள அனைத்து நிகழ்ச்சிகளை உலகெங்கும் உள்ள பக்தர்கள் நேரலையில் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதனிடையே, தமிழ்நாடு அரசு சட்டம் & ஒழுங்கை மேற்கொள்காண்பித்து நேரடி ஒளிபரப்பு விஷயங்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதித்தது. அதேபோல, இன்று பல்வேறு கோவிகளில் ஸ்ரீ ராமரின் பெயரில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிப்பதாக வாய்மொழி உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் மனுதாக்கல்: இந்த விவகாரம் சர்ச்சையாகிய நிலையில், நேரடி ஒளிபரப்புக்கு சட்டம் ஒழுங்கை காரணமாக தமிழ்நாடு அரசு கூறியது. கோவில்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும் கூறி இருந்தது. இந்த விசயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பாஜக & இந்து அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் (Supreme Court) மனுதாக்கல் செய்தது.
உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு: இந்நிலையில், வழக்கை அவசர மனுவாக ஏற்று விசாரணை செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், தமிழ்நாடு (Tamilnadu Govt) அரசு ராமர் கோவில் நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்புக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை இரத்து செய்யுமாறு உத்தரவிட்டனர்.