Rohit Sharma (Photo Credit: @mipaltan X)

ஜனவரி 22, ஹைதராபாத் (Hyderabad): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஜனவரி 25 ஆம் தேதி முதல் அடுத்தடுத்து 5 டெஸ்ட் தொடர்களில் மோதுகிறது. இதன் முதலாவது ஆட்டம் ஜனவரி 25-இல் தொடங்கி 29-இல் முடிகிறது. இந்த போட்டி ஹைதராபாத்தில் வைத்து நடைபெறுகிறது. இதற்காக தற்போது இங்கிலாந்து அணி ஹைதராபாத் வந்துள்ளது. இந்திய அணியை ரோகித் சர்மா வழி நடத்தி வருகிறார்.

5 டெஸ்ட் தொடர்கள்: முதல் இரண்டு போட்டிகளுக்கான வீரர்களும் அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், அதற்காக தற்போது அணியினர் தயாராகி வருகின்றனர். ரோகித் சர்மா (Rohit Sharma) தனது பயிற்சியை முதற்கட்டமாக தொடங்கி இருக்கிறார். தற்போது நடைபெறவுள்ள ஐந்து டெஸ்ட் தொடர்களின் முதல் ஆட்டம் ஹைதராபாத்தில் தொடங்கி, இறுதி ஆட்டம் மார்ச் 11 அன்று தொடங்கி தர்மசாலாவில் நிறைவடைகிறது. Mira Road Stone Pleading: ஜெய்ஸ்ரீராம் முழக்கத்துடன் பேரணி; கல்வீசி நடந்த தாக்குதல்.. அதிர்ச்சி சம்பவம்.!

இந்திய அணி வீரர்கள்: இந்திய அணியை வழி நடத்தி வரும் ரோகித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிராக 17 இன்னிங்ஸில் 9 டெஸ்ட் தொடர்களில் விளையாடி 747 ரன்கள் சேர்த்திருக்கிறார். அவரது அதிகபட்ச ஒரு போட்டி ரன்னாக 161 ரன்கள் இருக்கின்றன. அவரின் தலைமையிலான இந்திய அணியில் சுப்னம் ஹில், யாசஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், கேஎஸ் பாரத், துருவ் ஜூல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஐஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.