Supreme Court of India | Divorce (Photo Credit: Wikipedia Bar & Bench)

மே 17, புதுடெல்லி (Supreme Court of India): திருமணங்கள் ஒத்துப்போகும் சுபநிகழ்ச்சி திருமணம் என்பது சான்றோர் வாக்கு. இந்தியாவை பொறுத்தமட்டில் திருமணங்கள் என்பது பல்வேறு காரணிகளால் நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஜாதி, மதம், பணம் போன்ற பல விஷயங்களை கடந்த காதல் திருமணங்கள் மனதளவில் ஒத்துப்போக நடைபெறுகிறது. இவ்வாறான திருமணம் செய்யும் காதல் ஜோடிகளில் பலரும் சில ஆண்டுகளில் விவாகரத்து பெறுவதாகவும் பேச்சுக்கள் எழுந்தன.

இந்நிலையில், டெல்லி உச்சநீதிமன்றத்தில் காதல் ஜோடி ஒன்று விவாகரத்து வழங்க கூறி மனுதாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதிகள் பி.ஆர் கவாய், சஞ்சய் கரோல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. Karnataka CM: கர்நாடக மாநிலத்தின் முதல்வர் யார்?.. இன்று வெளியாகிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், வழக்கில் விவாகரத்து கோரிய தம்பதிகள் காதல் திருமணம் செய்வதர்கள் என்பதை வாதத்தின் மூலமாக அறிந்துகொண்டு, "காதல் திருமணம் செய்தவர்கள் தான் அதிகமாக விவாகரத்து கோருகிறார்கள்" என்ற வாதத்தை முன்வைத்தனர். இந்த வாதத்தை நீதிபதி பி.ஆர் கவாய் தெரிவித்தார்.

வழக்கு விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ள நீதிபதிகள், கணவரின் தரப்பு வாக்குமூலத்தை கேட்கையில் அவர் விவகாரத்தில் உறுதியாக இருந்துள்ளார். தம்பதிகள் காதல் திருமணம் செய்துகொண்ட காரணத்தால், கணவருக்கு ஆலோசனை வழங்கவும், அவரின் முடிவை யோசித்து எடுக்கவும் கால அவகாசம் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது.