Eshwar Khandare (Photo Credit: ANI)

மே 17, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் கடந்த மே 10ம் தேதி கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் 2023 (Karnataka Assembly Election 2023) நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியானது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் 2023-ல் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையாக அமோக வெற்றி அடைந்தது.

அம்மாநிலத்தில் காங்கிரஸ் - பாஜக (Congress Vs BJP) இடையே அரசியல் ரீதியாக கடுமையான மோதல் நிலவி வந்த நிலையில், இறுதியில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி அடைந்தது. பாஜக 66 தொகுதிகளில் வெற்றி அடைந்தது. குமாரசாமியின் ஜனதா தளம் 19 தொகுதிகளில் வெற்றி அடைந்தது.

காங்கிரஸ் கட்சி வெற்றியை அம்மாநில மக்கள் பெருவாரியாக சிறப்பித்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் தேர்வு செய்யப்படுவதில்லை தொடர்ந்து குழப்பமான சூழல் நிலவி வருகிறது. அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர்களான சித்தராமையா மற்றும் டி.கே சிவகுமார் ஆகியோரிடையே முதல்வர் தொடர்பான பனிப்போர் போட்டி நீடிக்கிறது. Fake Sim Cards: 30,000 போலி சிம் கார்டுகள் செயலிழப்பு; ஒரே நபரின் பெயரில் 600 சிம்கள்… அதிரவைக்கும் மோசடி நபர்களின் கைவரிசை.!

இன்று மாலை நேரத்தில் அக்கட்சியின் தேசிய தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்டுகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஈஸ்வர் கண்டரே இதுகுறித்து தெரிவிக்கையில், "நான் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை செய்தேன்.

கர்நாடக மாநிலத்தின் எதிர்காலம் மற்றும் அதன் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்தோம். கட்சியின் தலைமை கர்நாடக மாநில முதல்வர் குறித்து முடிவு எடுப்பார்கள். நாங்கள் 100% ஒற்றுமையுடன் இருக்கிறோம். இன்று மாலை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம்" என பேசினார்.