Padma Bhushan for Ajith Kumar (Photo Credit: @TrollywoodX / @TeluguChitraalu X)

ஜனவரி 25, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் உயரிய விருதுகளில் முக்கியமானதாக கருதப்படும் பத்ம விருதுகள் பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சேவை போன்ற பல்வேறு துறைகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. உயர்மட்ட சேவையில் சிறப்பான சேவைக்காக 'பத்ம பூஷண்' மற்றும் எந்தவொரு துறையிலும் சிறப்பான சேவைக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. Annamalai On Vengaivayal Case: வேங்கைவயல் சிபிசிஐடி விசாரணையில் வலுக்கும் சந்தேகம்: அண்ணாமலை கூறும் பரபரப்பு தகவல்.! 

139 பேருக்கு பத்ம விருதுகள் (Padma Awards 2025) அறிவிப்பு:

இந்த விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக மார்ச் / ஏப்ரல் மாதங்களில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாக்களில் இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகின்றன. 2025 ஆம் ஆண்டிற்கான 139 பத்ம விருதுகளை வழங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். 7 பேருக்கு பத்ம விபூஷண், 19 பேருக்கு பத்ம பூஷண், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்றவர்களில் 23 பேர் பெண்கள் ஆவார்கள். அந்தவகையில் ,  நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கலைத்துறையில் சிறந்து விளங்கிய அஜித் குமாருக்கு,  பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

 

பத்மபூஷன் விருது நடிகர் அஜித் குமாருக்கு வழங்கப்படுவதாக அறிவிப்பு: