ISRO Scientist Valarmathi (Photo Credit: Twitter)

செப்டம்பர் 4, ஸ்ரீஹரிகோட்டா (India News): சந்திரயான்-3 (Chandrayaan 3) உட்பட பல்வேறு விண்கலங்களை ஏவும்போது கண்டவனுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த  விஞ்ஞானி வளர்மதி. 64 வயதாகி இருக்கும் இவர் உடல்நல குறைபாடு காரணமாக சென்னையின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மாரடைப்பால்  உயிரிழந்தார்.

அரியலூர்  மாவட்டத்தைச்  சேர்ந்த இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தகவல் தொலைத்தொடர்பு (Electronics and Communication) துறையில் முதுகலை பொறியியல் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் 1984 ஆம் ஆண்டு இஸ்ரோவில் (ISRO) பணிக்குச் சேர்ந்தார். Rishabh Pant feels Grateful: ‘நான் வெளிச்சத்தை பார்க்க தொடங்கி விட்டேன்’: நம்பிக்கையூட்டும் ரிஷப்-இன் இன்ஸ்டாகிராம் பதிவு.!

இன்சாட் 2ஏ (Insat 2A), ஐஆர்எஸ் ஐடி (IRS ID), ஐஆர்எஸ் ஐசி (IRS IC), உட்பட பல்வேறு திட்டங்களில் பணியாற்றி இருக்கிறார். கவுண்டவுன் மட்டுமல்லாது வானத்தின் தெளிந்த நிலை மற்றும் விண்கலம் சென்றடைந்த தூரம் போன்றவற்றை இவர் அறிவிப்பார்.

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு, விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்ட ரிசாட் 1 (RISAT 1) க்கு திட்ட இயக்குனராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அதற்காக கடந்த 2015 ஆம் ஆண்டு, மறைந்த ஜனாதிபதி எபிஜே அப்துல் கலாம் (APJ Abdul Kalam) அவர்களின் பெயரில் தமிழக அரசாங்கம் வழங்கிய  விருதைப் பெற்றார்.

இஸ்ரோவின் முன்னாள் இயக்குனர் டாக்டர் வெங்கட கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் இனி இஸ்ரோவின் எதிர்கால பயணங்களில் வளர்மதி அவர்களின் குரல் இடம் பெறாது என்பது மிகவும் வருத்தம் தருவதாக குறிப்பிட்டு இருந்தார்.