Tata Consultancy Services (Photo Credit: @indianweb2 X)

ஜூலை 28, புது டெல்லி (New Delhi News): இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி நிறுவனம் 2025-26 ஆம் ஆண்டில் 12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயம் குறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பான பேட்டியில் அவர் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார். UPI Transactions: யுபிஐ பயனர்களுக்கு விரைவில் வருகிறது ஆப்பு?.. ரிசர்வ் வங்கி ஆளுநரின் ஷாக் தகவல்.!

கணிசமாக தொடரும் பணி நீக்கங்கள் :

அதன்படி, ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பல பணிகளை எளிமைப்படுத்தியுள்ளது. இதனால் பணி நீக்கங்கள் கணிசமாக தொடர்கிறது. தங்களுடன் போட்டி போடும் பல நிறுவனங்களும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களது செயல்முறையை முன்னேற்றத்தில் கொண்டு செல்வதால், அந்நிறுவனங்களுக்கு ஈடு கொடுக்க தாங்களும் செயற்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

ஆட்குறைப்பு நடவடிக்கை :

இதனால் ஆட்குறைப்பு நடவடிக்கை தொடர்கிறது என தெரிவித்துள்ளார். அதேபோல இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் நடப்பு நிதியாண்டில் (TCS Layoff 2025) சுமார் 2% ஊழியர்களை பணிநீக்கம் செய்யவும் முடிவெடுத்துள்ளது. எதிர்கால நிறுவனங்களை கட்டமைக்கும் பணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.