Andhra Bandh (photo Credit: Twitter)

செப்டம்பர் 11, அமராவதி (Andhra Pradesh News): சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக ஆட்சி செய்த காலகட்டத்தில் திறன் மேம்பாட்டு துறையில் (National Skill Development )அவர் ஊழல் செய்திருப்பதாக புகார் எழுந்தது. திறன் மேம்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட3300 கோடியில், திட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே சீமென்ஸ் (Siemens) மற்றும் டிசைன்  டெக் (Design Tech) நிறுவனங்களுக்கு 10%  நிதி ஒதுக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சிஐடி (CID) போலீசார் சந்திர பாபு நாயுடுவை காவலில் எடுத்து விசாரிக்க விஜயவாடா (Vijayawada) நீதிமன்றத்தில் முறையிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் 22 ஆம் தேதி வரை அவரை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.

அதன்படி அவருக்கு உடல்நலப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ராஜமுந்திரியில் இருக்கும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சந்திரபாபு நாயுடு தரப்பிலிருந்து கோரப்பட்ட ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. 9/11 Attacks 22nd Anniversary: 9/11 பயங்கரவாத சம்பவத்தின் 22-ம் ஆண்டு நினைவு நாள்: மனமுருகி அஞ்சலி செலுத்திய நியூயார்க் மாகாணம்.!

சந்திர பாபு நாயுடு கைது செய்யப்பட்டதை அறிந்த தெலுங்கு தேசம் கட்சியினர் (Telugu Desam Party), ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட கட்சித் தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திரா முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டத்தை அறிவித்திருந்தனர். இதனால் ஆந்திர முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது.