Knife (Photo Credit: Pixabay)

டிசம்பர் 26, பரிதாபாத் (Haryana News): ஹரியானா மாநிலம், பரிதாபாத் (Faridabad) பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் அன்ஷூல் என்ற மாணவர், நேற்று முன்தினம் (டிசம்பர் 24) கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அன்ஷுலின் சகோதரி அஞ்சலி கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவருடன் தனது சகோதரர் வாக்குவாதம் செய்தார். இதனால், நாங்கள் சந்தைக்குச் சென்றபோது, ஹிமான்ஷு மாத்தூர் மற்றும் ரோஹித் தாமா உட்பட 10 பேர் சேர்ந்து அன்ஷுலை குச்சிகள் மற்றும் கத்தியால் குத்தினர் என அவர் தெரிவித்தார். New Hand Baggage Rules: விமான பயணிகள் கவனத்திற்கு! லக்கேஜ் விதிமுறைகளில் மாற்றம்.. விபரம் உள்ளே.!

பள்ளி மாணவர் கொலை:

இதனைப் பார்த்த உள்ளூர் மக்கள் ஓடி வந்து அன்ஷுலுக்கு உதவி செய்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், அவர் 14 முறை கத்தியால் (Murder) குத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேற்கொண்ட விசாரணையில், பாதிக்கப்பட்டவரின் நண்பரான அன்மோல், குற்றம் சாட்டப்பட்டவர் பஸ்லேவ காலனியில் குண்டர் கும்பலை பரப்ப விரும்புவதாகவும், போதைப்பொருள் விற்பனை செய்வதாகவும் காவல்துறையிடம் தெரிவித்தார். அவர்கள் அப்பகுதியில் உள்ள பெண்களிடம் அடிக்கடி தவறாக நடந்து கொள்வர் எனவும் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் கைது:

மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு, குற்றம் சாட்டப்பட்டவருடன் அன்ஷுல் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் பழிவாங்கும் முயற்சியில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அன்ஷுலைக் கொன்றனர் என்று அன்மோல் காவல்துறையிடம் கூறினார். அஞ்சலியின் புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து மாத்தூர், தாமா உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.