CBSE Class 12 Results (Photo Credit: @DivasKant77 X)

மே 13, டெல்லி (Delhi News): மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. CBSE 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2025 இணைப்பு இன்னும் எந்த அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் செயலில் இல்லை. இப்போது, டிஜிலாக்கரில் (Digilocker) மட்டுமே நேரலையில் உள்ளது. 2025ஆம் ஆண்டு CBSE 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்கள் பொறுமையாக இருக்கவும், தங்கள் பதிவு எண், பள்ளிக் குறியீடு மற்றும் நுழைவுச் சீட்டு விவரங்களைத் தயாராக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். தேர்வு முடிவுகளை, cbseresults.nic.in மற்றும் results.cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளம் மூலம் பெற முடியும். கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழப்பு.. 6 பேர் நிலைமை கவலைக்கிடம்..!

பெண்கள் முதலிடம்:

2025 ஆம் ஆண்டு 16 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதியுள்ளனர். இதில், 88.39% மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் 0.41% அதிகரித்துள்ளது. ஆண்களை விட பெண்கள் 5.94% அதிகமாக உள்ளனர். 91% க்கும் அதிகமான பெண்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: