Young Man Murder in Uttarakhand (Photo Credit: @TrueStoryUP X)

ஜூன் 02, ஹால்ட்வானி (Uttarakhand News): உத்தரகாண்ட் மாநிலம், ஹால்ட்வானியின் (Haldwani) பன்புல்புரா பகுதியை சேர்ந்தவர் தருண் சிங் ராவத். இவர், கீதா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், கீதா தனது காதலனை பிரிந்துவிட்டு, வேறொருவரை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து, அவரை விவாகரத்து செய்துவிட்டு, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தருண் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், கீதா இதற்கு மறுப்பு தெரிவித்தார். Trending Video: ஆட்டோ ஓட்டுனருக்கு செருப்படி.. வைரல் பெண்மணியின் கதறல் வீடியோ.!

தம்பதி கைது:

இந்நிலையில், நேற்று (ஜூன் 01) இரவு கீதா தருணை வீட்டிற்கு அழைத்தார். அவர் இரவில் தனது காதலியின் அறையில் தூங்கினார். நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்த அவர் மீது, கீதாவும் அவரது கணவர் அனில் சாஹுவும் சேர்ந்து தலையில் கல்லால் அடித்து கொடூரமாக கொலை (Murder) செய்தனர். பின்னர், இருவரும் சேர்ந்து உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனையடுத்து, காவல்துறையினர் விசாரணையில், இருவரும் சிக்கிக்கொண்டனர். கணவன் - மனைவி இருவரையும் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.