Visual From Video (Photo Credit : @TheSouthfirst / @karnatakaportf X)

ஜூன் 02, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் சமீபகாலமாகவே கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி பேசும் நபர்கள் இடையே கருத்து முரண் காரணமாக வாக்குவாதம் நடைபெறுவது அதிகம் ஏற்படுகிறது. இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலுக்கு பெயர் பெற்ற பெங்களூரில் நடந்த விபத்து சம்பவத்தில் ஹிந்தி மொழியில் பேசிய பெண்மணி, கன்னட ஆட்டோ ஓட்டுனரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது.

ஆட்டோ ஓட்டுனரை செருப்பால் தாக்கிய பெண்:

அங்குள்ள பெல்லந்தூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது, ஆட்டோ லேசாக உரசியதாக தெரிய வருகிறது. இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் ஆட்டோ ஓட்டுனரை வழிமறித்து செருப்பால் தாக்கி தகராறு செய்துள்ளார். மேலும் இந்தி மொழியில் பேசி ஆட்டோ ஓட்டுனரை கடுமையாக கடிந்து கொண்டவர், அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோவை ஆட்டோ ஓட்டுனர் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிடவே, தற்போது பெண்மணிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது. Anna University Rape Case: குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை.. சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவு.! 

மன்னிப்பு கேட்ட பெண்மணி :

மேலும் ஆட்டோ ஓட்டுனரும் காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் பெண்ணின் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கைது செய்த நிலையில், தனது செயலுக்கு பெண்மணி மன்னிப்பு கேட்டுள்ளார். பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண்மணி தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் தனது கணவருடன் பைக்கில் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

பெண்மணி ஆட்டோ ஓட்டுனரை தாக்கியது குறித்த வீடியோ :

ஆட்டோ ஓட்டுனரின் காலில் பெண்மணி விழுந்தது குறித்த வீடியோ :