நவம்பர் 06, வாரணாசி (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி (Varanasi) பதாய்னி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திர குப்தா. இவரது 2வது மனைவி நீது (வயது 45). இத்தம்பதிக்கு நவனேந்திரா (வயது 25), சுபேந்திர குப்தா (வயது 15) என இரு மகன்களும், கவ்ராங்கி (வயது 16) என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில், நேற்று (நவம்பர் 05) காலை ராஜேந்திர குப்தாவின் வீட்டின் கதவு நீண்ட நேரமாக பூட்டியே இருந்தது. பின், வேலைக்கார பெண் வந்து கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு நீது மற்றும் அவரது மகன்கள், மகள் என 4 பேரும் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடந்தனர். Blind Murder Mystery: மாமாவை கொலை செய்து நாடகமாடிய மருமகன்.. கிடுக்குப்புடி விசாரணையில் சிக்கிய கொலையாளி..!
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது கணவர் ராஜேந்திர குப்தாவை தேடியபோது, அவரும் துப்பாக்கி குண்டு காயங்களுடன் வீட்டிற்கு அருகில் உள்ள இடத்தில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்த விசாரணையில், குப்தா ஏற்கனவே தன் தந்தை மற்றும் சகோதரர்களை கொலை செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தீபாவளியையொட்டி ஜாமீனில் வந்த குப்தாவின் வீட்டில் சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வீட்டில் துாங்கி கொண்டிருந்த மனைவி மற்றும் மகள், இரு மகன்களை துப்பாக்கியால் சுட்டு கொலை (Murder) செய்த குப்தா, தானும் சுட்டு தற்கொலை (Suicide) செய்து கொண்டார் என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.