
மே 20, டெல்லி (Delhi News): நீதித்துறையில் பணியாற்ற குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றி இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் (BR Gavai), நீதிபதிகள் ஏ.ஜி. மசிஹ், கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்த உத்தரவில், 'சிவில் நீதிபதிகள் தேர்வு எழுத குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு நடந்து கொண்டிருக்கும் நீதித்துறை பணியமர்த்தலுக்கு பொருந்தாது என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. Trending Video: காதலியை பைக் டேங்கில் அமர வைத்து லாங் ட்ரைவ்.. ஆதாரத்துடன் சிக்கிய வீடியோ.!!
3 ஆண்டு பயிற்சி கட்டாயம்:
இதனைத் தொடர்ந்து, நீதிபதிகளுக்கு சட்ட எழுத்தராக இருந்த அனுபவமும் கணக்கிடப்படும். நீதித்துறையில், புதிய சட்ட பட்டதாரிகளை நியமிப்பது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளது என்றும், நீதித்துறை பணியில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருத்தல் வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.