Wife Kills Husband in Meerut (Photo Credit: @JyotiDevSpeaks X)

ஏப்ரல் 17, மீரட் (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், மீரட்டில் (Meerut)பஹ்சுமா காவல்நிலையப் பகுதியில் உள்ள அக்பர்பூர் சதாத் கிராமத்தைச் சேர்ந்தவர் அமித். இவரது மனைவி ரவிதா, அமர்தீப் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் கணவர் அமித்துக்கு தெரியவர, அவர் இதனை கண்டித்துள்ளார். இதனால், தனது கணவரை தீர்த்துக்கட்ட ரவிதா முடிவு செய்தார். உனக்கு 18 எனக்கு 28.. மருமகனுடன் காதல் வயப்பட்ட அத்தை.., ஓட்டம் பிடித்த ஜோடி..!

கணவரை கொன்று நாடகமாடிய மனைவி:

இந்நிலையில், அமித் பாம்பு கடித்து உயிரிழந்ததாக அவரது மனைவி ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார். இதில், சந்தேகமடைந்த கிராம மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவில், அமித் பாம்பு கடித்து இறக்கவில்லை, மூச்சுத் திணறி உயிரிழந்ததாக அறிக்கை வெளியானது. இதனையடுத்து, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரது மனைவி ரவிதாவிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

இருவர் கைது:

விசாரணையில், ரவிதா மற்றும் அவரது காதலன் அமர்தீப் ஆகிய இருவரும் சேர்ந்து அமித் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது கழுத்தை நெரித்து (Murder) கொன்று, பாம்பை உடலின் கீழ் அழுத்தியுள்ளனர். இதனால் அது அவரை பல முறை கடித்துள்ளது. காலையில், ரவிதா தனது கணவர் பாம்பு கடித்து உயிரிழந்ததாக கூறி அனைவரையும் நம்ப வைத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து, ரவிதா மற்றும் அவரது காதலன் அமர்தீப் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.