Husband Murder in Uttarakhand (Photo Credit: @TrueStoryUP X)

ஜூன் 20, கோட்வார் (Uttarakhand News): உத்தரகண்ட் மாநிலம், கோட்வார் (Kotdwar) மாவட்டத்தில் துகடா பகுதியில், கடந்த ஜூன் 5ஆம் தேதி அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையின் போது, ​​அந்த உடல் டெல்லியில் வசந்த் குஞ்சில் வசிக்கும் ரவீந்தர் குமார் (வயது 56) என அடையாளம் காணப்பட்டது. மேலும், விசாரணையில் ரவீந்தர் தனது இரண்டாவது மனைவி ரீனா (36) மற்றும் அவரது காதலர் பரிதோஷ் குமாரால் கொலை செய்யப்பட்டார் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்தது. Honor Killing: பெற்ற மகளை கொன்று, உடலை எரித்த கொடூர தந்தை.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!

கணவர் கொலை:

ரீனாவும் பரிதோஷும் முதலில் ரவீந்திரனை மது அருந்த வைத்து, பின்னர் மண்வெட்டியால் தாக்கி கொலை (Murder) செய்தனர். விசாரணையின் போது, ​​அதிக கடன் காரணமாக ரவீந்திர வீட்டை விற்க விரும்பினார். ஆனால், ரீனா இதனை விரும்பவில்லை. இந்த தகராறில், ரீனா பரிதோஷை காதலித்து, இருவரும் சேர்ந்து கொலை செய்ய சதி செய்தனர். கணவரை கொன்று, உடலை கோட்வாருக்கு கொண்டு வந்து காட்டில் வீசப்பட்டது. மேலும் அவரது கார் நொய்டாவில் விடப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து, மனைவி ரீனாவையும், பிஜ்னோரை சேர்ந்த காதலன் பரிதோஷையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.