Wife Murder To Husband: கணவனின் கழுத்தை நெரித்து கொன்ற மனைவி கைது - விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
கள்ளத்தொடர்பை கண்டித்த கணவரை, மனைவி கழுத்தை நெரித்து கொன்றுள்ள சம்பவம் கர்நாடகாவில் நிகழ்ந்துள்ளது.
மார்ச் 22, ராய்ச்சூர் (Karnataka News): கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள சிங்கனோடி கிராமத்தில் வசித்து வரும் ராஜு நாயக் (வயது 38) மற்றும் இவரது மனைவி சினேகா (வயது 36). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிங்கனோடி கிராமத்தில், கோவில் கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளது. அதில், கட்டட தொழிலாளியாக வேலை செய்து வந்த மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த பாபுக்கும். சினேகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. Son Murder To Father: மதுபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் – சொத்து தகராறால் நேர்ந்த சோகம்..!
இதுகுறித்து, அவருடைய கணவர் ராஜு நாயக்கிற்கு தெரியவந்துள்ளது. மனைவி சினேகாவிடம் இதுபற்றி கள்ளக்காதல் தொடர்பை நிறுத்துமாறு கண்டித்துள்ளார். இதனை சினேகா பெரிதும் பொருட்படுத்தாமல், கள்ளத்தொடர்பை நீடித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ராஜு நாயக் வாயில் நுரை தள்ளியவாறு இறந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கிடந்துள்ளார். உடனடியாக, சினேகா அக்கம்பக்கத்தினரிடம் அவர் அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்துவிட்டார் என கூறியுள்ளார். அவரின் மேல் ஏற்பட்ட சந்தேகத்தினால் உறவினர்கள், யபாலதின்னி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மதுவில் தூக்க மாத்திரையை கலந்து கொடுத்து, பின் அவரை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டேன் என மனைவி சினேகா நடந்ததை கூறியுள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்தனர்.
(The above story first appeared on LatestLY on Mar 22, 2024 04:35 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

