Crime Murder (Photo Credit: Pixabay)

ஜனவரி 07, ராய்ப்பூர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநிலம், சங்கிலி மாவட்டத்தில் வசித்து வரும் தம்பதி கேவல் - ஐஸ்வரி. இத்தம்பதிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த ஜனவரி 03ஆம் தேதி ஐஸ்வரி வீட்டில் டீ போட்டுக் கொண்டு இருந்தார். அப்போது, தம்பதிகளுக்கு இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. Couple Suicide After Killing Children: 2 குழந்தைகளை கொன்றுவிட்டு, தம்பதி தூக்கிட்டு தற்கொலை..!

வெட்டிக்கொலை:

இதில், டீ கொடுக்காததால் ஆத்திரமடைந்த அவர், தனது மனைவியை கோடாரியால் வெட்டிக்கொலை (Murder) செய்துவிட்டு, தலைமறைவானார். இதனைத்தொடர்ந்து, தனது மனைவியை கொலை செய்து விட்டதாக அவர் காவல்நிலையத்தில் சரணடைந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.