Agasthiyar Falls (Photo Credit: @msreeni60 X)

ஏப்ரல் 22, திருநெல்வேலி (Tirunelveli News): திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் (Western Ghats) அமைந்துள்ள அகஸ்தியர் அருவியில், கோடை வெயில் தாக்கம் அதிகமாக இருந்தபோதிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது. PBKS Vs GT Highlights: குஜராத் அணி கடைசி ஓவரில் வெற்றி; பஞ்சாப் அணி போராடி தோல்வி..!

இங்கு ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் வந்து உற்சாகமாக குளித்து மகிழ்வர். இந்நிலையில், கோடைகால சீசன் தொடங்கியதால், சுற்றுலா பயணிகள் குளிர்ந்த இடம் தேடி அலைகின்றனர். தற்போது, பாபநாசம் அகஸ்தியர் அருவியில் நீர் அதிகளவில் கொட்டுகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வந்தவாறு உள்ளனர்.

நேற்றைய தினம் வாரவிடுமுறை என்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் கார்களிலும், வேன்களிலும் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு வந்து அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்துள்ளனர். இதனையடுத்து, கோடை விடுமுறையில் இன்னமும் சுற்றுலா பயணிகளின் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.