Woman Chops Husband's Private Part (Photo Credit : Pixabay)

ஆகஸ்ட் 11, உத்திரபிரதேசம் (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அமேதி மாவட்டம் கசகஞ்ச் கச்னவ் கிராமத்தில் வசித்து வருபவர் அன்சர் அகமது (வயது 38). இவருக்கு நஸ்னீன் பானு, சபிஜோல் என்ற இரண்டு மனைவிகள் இருக்கின்றனர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அன்சர் அகமது தனது இரண்டு மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் மூவருக்கும் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கணவரின் பிறப்புறுப்பை அறுத்த மனைவி :

நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அகமதுவுக்கும், அவரது இரண்டாவது மனைவி பானுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் இருவருக்கும் இடையே கைகலப்பான நிலையில், ஆத்திரமடைந்த பானு கணவரின் பிறப்புறுப்பை அறுத்து துடிக்க விட்டுள்ளார். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அகமது கதறித் துடித்த நிலையில், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். Death Note: டெத் நோட் அனிமே பார்த்து நரகத்திற்கு செல்வதாக 7 ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை.. பெற்றோர்களே கவனம்.! 

மனைவி கைது :

அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறையினர் அகமதுவின் புகாரின் பேரில் நஸ்னீன் பானுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.