MK Stalin (Photo Credit: @TNDIPR X)

ஜூலை 11, பாளையம்புதூர் (Dharmapuri News): உங்கள் ஊரில் - உங்கள் அரசு என்ற கொள்கையுடன், "மக்களுடன் முதல்வர்" (Makkaludan Muthalvar) என்ற திட்டம் இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் (MK Stalin) முன்னிலையில் தொடங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதல்வர் கலந்துகொண்டு மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் வாயிலாக மக்களிடம் இருந்து நேரடியாக, அவர்களின் ஊராட்சி பகுதிகளில் இருந்தே புகார்கள் பெறப்பட்ட, அதற்கான தீர்வுகளை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. 8 Year Old Girl Gang Rape & Murder: 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற 3 சிறார்கள்.. பிஞ்சிலே பழுத்த 12 & 13 வயது காம பிசாசுகளால் பயங்கரம்.! 

மக்களுடன் முதல்வர் திட்டம்:

இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு மக்களிடம் உரையாற்றிய தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், "மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைந்து உடனடி தீர்வு காண வழிவகை செய்யப்படும். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பே மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகள் கேட்டறியப்பட்டு தீர்வும் காணப்பட்டது. தற்போது ஊராட்சி பகுதிகளில் இருந்து நேரடியாக புகார்களை பெறுவதற்கு எதுவாக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நகராட்சியாக தரம் உயரும் அரூர்:

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் வாயிலாக பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும், அதற்கான தீர்வை காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 30 நாட்களுக்குள் மக்களின் புகார்கள் மீதான தீர்வு காணப்படும். பாளையம்புதூர் அரசுப்பள்ளியில் வகுப்பறைகள் அனைத்தும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும். வெண்ணம்பட்டி பகுதியில் ரூ.31 கோடி செலவில் இரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். இதுவரை பேரூராட்சியாக இருந்து வந்த அரூர், இனி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். தமிழ்நாட்டில் தொடர் படுதோல்விகளை சந்தித்துள்ள மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு இன்னும் நிதிவழங்க மறுப்பு தெரிவிக்கிறது" என தெரிவித்தார்.