ஜனவரி 08, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் உள்ள அனைத்து சாலைகளிலும், விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டால், 2025 மார்ச் மாதத்திற்குள் பணமில்லாத சிகிச்சை கிடைக்கத் தேவையான நடைமுறைகளுக்கான செயல்பாடுகள் நிறைவுபெற்று, அதற்கான வழிவகை செய்யப்படும் என மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் வாயிலாக எந்த சாலையிலும் மோட்டார் வாகனத்தை பயன்படுத்தி ஏற்படும் விபத்தினால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு உரிய சிகிச்சை விரைந்து கிடைக்க வழிவகை செய்யப்படும். Borewell Death: 33 மணிநேர போராட்டம் வீணான சோகம்; ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்த இளம்பெண் பலி.!
திட்டம் விரிவாக்கம்:
காவல்துறை, மருத்துவமனைகள், மாநில சுகாதார முகமை ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தின் வாயிலாக விபத்தில் சிக்கிய நபர் 7 நாட்களுக்குள், ரூ.1.5 இலட்சம் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாக பெற இயலும். இந்த திட்டம் தொடக்க நிலையில் சண்டிகரில் 14 மார்ச் 2024 முதல் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதனை 2025 மார்ச்க்குள் நாடு முழுவதும் விரிவாக்கம் செய்து சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விபத்தில் சிக்கியோர் உயிரை பொன்னான நேரத்தில் காப்பாற்றும் பொருட்டு, அவர்களுக்கு மருத்துவ சேவை விரைந்து கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, விமானிகளை போல வாகன ஓட்டுனர்களுக்கும் பணிநேரம் தொடர்பான வரையறை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.