Dead Body (Photo Credit: Pixabay)

ஜனவரி 25, லக்னோ (Uttar Pradesh News): உத்தர பிரதேச மாநிலம், நவாப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரின்ஸ் (வயது 12). இவர் பக்சா கிராமத்தில் வசிக்கும் தமது மாமா வீட்டிற்கு வந்துள்ளார். அவரது மகன் அபிஷேக் (வயது 14). சிறுவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (ஜனவரி 23) மாலை வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் கிராமத்தின் பல பகுதிகளில் அவர்களை தேடியும் எங்கும் கண்டுபிடிக்க முடியவில்லை. Son Kills Mother: குடும்ப தகராறில் தாய் கோடாரியால் வெட்டிக் கொலை; மகன் தற்கொலை முயற்சி..!

சிறுவர்கள் கொடூர கொலை:

இதுகுறித்து, குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று (ஜனவரி 24) இருவரின் சடலங்கள் அங்குள்ள வயலில் கண்டெடுக்கப்பட்டன. அவர்களின் கைகள், கால்கள் கட்டப்பட்டு, கழுத்தறுத்து (Murder) சடலமாக கிடந்தனர். அவர்களின் வாயில் துணி வைத்தும் திணிக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றினர். மேலும், இச்சம்பவம் குறித்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.