
பிப்ரவரி 10, பெங்களூரு (Karnataka News): கர்நாடக மாநிலம், பெங்களூருவில் (Bengaluru) போம்மனஹள்ளி காரேபாவி பகுதியைச் சேர்ந்தவர்கள் தீப்பு (வயது 20), மற்றும் யோகேஸ்வரன் (வயது 20). இவர்கள் இருவரும் ஹெப்பகோடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் அதே கல்லூரியில் பயின்று வரும் 3 நண்பர்களுடன் சேர்ந்து பண்ணேற்கட்ட பகுதிக்குச் சென்றுள்ளனர். Wife Kills Husband: தினமும் குடித்துவிட்டு தகராறு; கணவரை கொன்றுவிட்டு, குழந்தைகளுடன் தப்பியோடிய மனைவி..!
நீரில் மூழ்கி பலி:
இதனையடுத்து, அப்பகுதியில் உள்ள சுவர்ணமூகி என்று அழைக்கப்படும் குளத்தில் நண்பர்கள் 5 பெரும் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, நீச்சல் தெரியாத நிலையில், குளத்தில் ஆழமான பகுதிக்குச் சென்ற யோகேஸ்வரன், நீரில் மூழ்கி தத்தளித்துள்ளார். அவரை காப்பாற்ற தீப்பு சென்றுள்ளார். இவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், இருவரும் நீரில் மூழ்கினர். இதனைக்கண்ட மற்ற நண்பர்கள் மூன்று பேருக்கும் நீச்சல் தெரியாத நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர்.
தீவிர விசாரணை:
இதுகுறித்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீரில் மூழ்கிய 2 கல்லூரி மாணவர்களை சடலமாக மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.