Young Tribal Man Attacked (Photo Credit: @BJPForKerala X)

மே 28, பாலக்காடு (Kerala News): கேரள மாநிலம், பாலக்காடு (Palakkad) மாவட்டத்தில் உள்ள சித்தூர் பழங்குடி இனத்தை சேர்ந்தவர் சிபு (வயது 19). இவர், சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பால் வேன் மீது வழுக்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. அவர், வேண்டுமென்றே விழுந்து வாகனத்தை சேதப்படுத்தியதாகக் கூறி, வாகனத்தை ஓட்டி வந்த விஷ்ணுதாஸ் (வயது 31) மற்றும் ரெஜி மேத்யூ (வயது 21) ஆகிய 2 பேரும் சிபுவை அரை நிர்வாணப்படுத்தி, சாலையோர மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியுள்ளனர். 5-Year-Old Girl Rape Case: கோவிலில் வைத்து 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி..!

இருவர் கைது:

சுமார் 1 மணிநேரம் அங்கேயே விட்டு அவர்கள் சென்றுள்ளனர். அதன்பின்னர், அவ்வழியாக சென்றவர்கள் அவரை விடுவித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலான நிலையில், விஷ்ணுதாஸ் மற்றும் ரெஜி மேத்யூ ஆகிய இருவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ இதோ: