ஜூலை 16, புதுடெல்லி (New Delhi News): குழந்தைகளின் ஆதார் தகவல்களை பெற்றோர்கள் புதுப்பிக்க வேண்டும் என இந்திய ஆதார் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. 5 வயதுக்கு மேல் இருக்கும் குழந்தைகளின் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி ஆகிய விபரங்கள் வைத்து முதலில் ஆதார் வழங்கப்படுகிறது. 5 வயதை தாண்டும் பட்சத்தில் குழந்தைகளுக்கு கருவிழி பரிசோதனை, கைரேகை பதிவுகளும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. மூடியை தின்று 800 பாட்டில்கள் மதுவை குடித்த எலிகள்.. அதிகாரிகளை அதிரவைத்த அரசு ஊழியர்கள்.!
ஆதார் புதுப்பிப்பு :
இதனால் 5 முதல் 7 வயதுடைய குழந்தைகளின் பெற்றோர்கள் சேவை மையங்களை அணுகி அதனை இணைத்துக் கொள்ளலாம். 7 வயதை தாண்டிய குழந்தைகளுக்கு ரூ.100 கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம். 7 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஆதார் எண், கைரேகை, கருவிழி இணைக்காத பட்சத்தில் ஆதார் அட்டை செயலிழக்கும் வாய்ப்பும் அதிகம். ஆகையால் கட்டாயம் குழந்தைகளின் பெற்றோர் ஆதார் தகவல்களை புதுப்பித்துக் கொள்வது நல்லது.