பிப்ரவரி 01, புதுடெல்லி (New Delhi): ஒட்டுமொத்த இந்திய மக்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்த பட்ஜெட் 2025 - 2026 (Budget 2025 - 2026) , பிப்ரவரி 01, 2025 இன்று காலை 11:00 மணியளவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (Nirmala Sitaraman) தாக்கல் செய்கிறார். நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2025-2026 ஐ (Parliament Budget Session 2025) முன்னிட்டு, நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு (President Droupadi Murmu) ஒருங்கிணைந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 8 வது பட்ஜெட் உரையை மக்களவையில் தாக்கல் செய்கிறார். இ-பட்ஜெட் 2025 - 2026 இந்திய மக்களின் எதிர்பார்ப்பை ஏற்புத்தியுள்ள பட்ஜெட் என்பதால், உலகளவிலும் கவனிக்கப்படுகிறது. New Income Tax Bill: புதிய வருமான வரி சட்டம் அமலாகிறது - பட்ஜெட்டில் நிதியமைச்சர் அதிகாரபூர்வ அறிவிப்பு.!
வருமான வரிவிலக்கு உச்ச வரம்பு:
தனிநபர் வருமான வருவாய் வரிவிலக்கு வரம்பு ரூ.12 இலட்சமாக உயர்த்தப்படுகிறது. முன்னதாக வருமான வரி உச்சவரம்பு ரூ.7 இலட்சமாக இருந்த நிலையில், தற்போது ரூ.12 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மாதம் வருமானம் ரூ.1 இலட்சம் வரை பெரும் நபர்கள் பயன் அடைவார்கள். ஒரு ஆண்டுக்கு ரூ.12 இலட்சம் வருமானம் பெறுவோர், ரூ.80000 வரை வரிசலுகையை பெறுவார்கள். ரூ.4 இலட்சம் வரை வரி இல்லை, ரூ.4 இலட்சம் முதல் ரூ.8 இலட்சம் வரை 5 % வரி, ரூ.8 இலட்சம் முதல் ரூ.12 இலட்சம் வரை 10 %, ரூ.12 இலட்சம் முதல் ரூ.16 இலட்சம் வரை 15 % வரி, ரூ.16 இலட்சம் முதல் ரூ.20 இலட்சம் வரை ரூ.20 % வரி, ரூ.20 முதல் ரூ.24 இலட்சம் வரை 25 % வரி, ரூ.25 இலட்சத்திற்கு மேல் 30 % வரி பிடித்தம் செய்யப்படும். இதில் ரூ.12 இலட்சம் வரை ஆண்டுக்கு வருமானம் பெறுவோரின் சம்பளத்தில் டிடிஎஸ் தொகை பிடித்தம் செய்யப்பட்டு, உரிய கணக்கு தாக்கம் செய்யப்பட்ட பின் அவை மீண்டும் திரும்ப வழங்கப்படும்.