Jyotiraditya Scindia & Madhavi Raje Scindia (Photo Credit: @IANS_India / @TirangaBhaiya X)

மே 15, புதுடெல்லி (New Delhi): மத்திய அமைச்சரவையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் சிவில் விமான போக்குவரத்து மற்றும் எஃகு துறைகளின் அமைச்சராக பணியாற்றி வருபவர் ஜோதிராதித்ய சிந்தியா (Jyotiraditya Scindia). மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள குவாலியாரை பூர்வீகமாக கொண்ட சிந்தியா, தற்போது அலுவல் பணிகள் காரணமாக டெல்லியில் தங்கி இருக்கிறார். அவ்வப்போது தொகுதிக்கு சென்று நற்பணிகளை கவனித்து வருவது வழக்கம். இவரின் தாயார் மாதவி ராஜே சாஹிப் சிந்தியா (வயது ). FB Insta Down: உலகளவில் முடங்கியது பேஸ்புக், இன்ஸ்டாகிராம்.. பயனர்கள் அவதி.!

உடல்நலக்குறைவால் மரணம்: தற்போது மகனுடன் வசித்து வரும் மாதவிக்கு கடந்த சில நாட்களாகவே கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயது மூப்பு காரணமாக ஏற்கனவே உடல்நலம் குன்றி இருந்த மாதவி (Jyotiraditya Scindia Mother Madhavi Scindia Passed Away), தொடர்ச்சியாக உடல்நலச்சரிவை சந்தித்த காரணத்தால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், இன்று காலை 09:28 மணியளவில் அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நிமோனியாவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரின் மறைவு மத்திய அமைச்சரின் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Assassination Attempt: முன்னாள் பெண் அமைச்சரின் பாதுகாவலர் மீது கார் ஏற்றிக்கொலை செய்ய முயற்சி: வீட்டு வாசலில் நடந்த சம்பவம்.. அதிர்ச்சி காட்சிகள்.! 

ஜோதிராதித்ய சிந்தியா பற்றி சுருக்கமாக: தந்தை மாதவராவ் சிந்தியாவின் மரணத்திற்கு பின்னர், கடந்த 2001ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் முன்னாள் மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய ஜோதிராதித்ய சிந்தியா, 2020ம் ஆண்டுக்கு பின் தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டார். இதனையடுத்து, அவருக்கு 2021ம் ஆண்டு வான்வழி போக்குவரத்து மற்றும் எக்கு துறைக்கான மத்திய அமைச்சர் பொறுப்பும் வழங்கப்பட்டது. அரசியல் பாரம்பரிய பின்னணி கொண்ட ஜோதிராதித்ய சிந்தியா, தொடர்ந்து டெல்லியில் தங்கியிருந்து அலுவல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.