Snips from Video (Photo Credit: Tiwtter)

செப்டம்பர் 19, ரேபரேலி (Uttar Pradesh News): உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி பகுதியில் வசித்து வரும் 28 வயது பெண்மணி, தனது 22 வயது தங்கையுடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

அப்போது அப்பகுதியைச் சார்ந்த முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரும், இந்த இரண்டு அக்கா-தங்கையும் நண்பர்கள் என்று கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவரும் கோவிலுக்கு சென்று இருக்கிறார்.

இவர்கள் அனைவரும் அங்குள்ள கோவில் வளாகத்தில் அமர்ந்துள்ளார். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் கோவிலுக்குள் சென்று முஸ்லிம் மதத்தைச் சார்ந்த நபர் பெண்களுடன் அமர்ந்திருப்பதை பார்த்து ஆத்திரமுற்றனர்.

அவர்களிடம் விசாரித்துவிட்டு, முஸ்லீம் நபரை நோக்கி "நீ லவ் ஜிகாத் செய்ய இங்கு வந்தாயா? இந்து பெண்களுடன் உனக்கு என்ன வேலை?" என்று பல கேள்விகளை முன் வைத்து அவரை கடுமையாக தாக்கி இருக்கின்றனர். Couple Attacked in Toll Plaza: தம்பதிகளை கடுமையாக தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்; பதைபதைக்க வைக்கும் சம்பவத்தின் அதிர்ச்சி வீடியோ.!

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ அவர்களால் எடுக்கப்பட்ட நிலையில், வீடியோ வைரல் ஆகி வருகிறது. இதனையடுத்து, ரேபரேலி காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள ஆணையிடப்பட்டது.

வீடியோவின் படி, அமன், ஹிமான்சு, ஹார்ஸ், உதயகுமார் ஆகிய நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிறர் தேடப்பட்டு வருகின்றனர்.

மேலும், இந்த விவகாரத்தில் யாருக்கு தொடர்பு உள்ளது? என்ற விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. கைதாகியவர்கள் மீது இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 323 மற்றும் 151 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.