ஜனவரி 27, கோரக்பூர்: உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள கோரக்பூர் மாவட்டம் (Gorakhpur, UttarPradesh) பதல்கஞ்ச், சாபியா உமரோ (Chhapia Umaro) கிராமத்தை சேர்ந்த 70 வயது முதியவர் கைலாஷ் யாதவ் (Kailash Yadav). இவர் பர்ஹால்கஞ்ச் காவல் நிலையத்தில் வாயிற் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். அங்கு இவரை சௌகிதார் அல்லது பாதுகாவலாளி (Chowkidar / Security) என்று அழைப்பார்கள்.
கைலாஷின் மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திவிட்டார். இதனால் தனது 4 மகன்களோடு வசித்து வருகிறார். இவர்கள் நால்வருக்கும் திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கின்றனர். இதற்கிடையில், கைலாஷின் 3வது மகன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். Indian American Nominated Brigadier General: இந்திய வம்சாவளியை நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் மூத்த ஜெனரல் பொறுப்பில் பணியமர்த்த ஜோ பைடன் பரிந்துரை.!
இதனால் அவரின் மனைவி பூஜா (வயது 28) தனியே வசித்து வந்துள்ளார். அவர்களுக்கு பாதுகாப்பாக அவர்களோடு கைலாஷ் யாதவ் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கணவரை இழந்த பூஜாவும், மனைவியை இழந்த கைலாஷ் யாதவும் காதல் வயப்பட்டதாக தெரியவருகிறது. அதாவது, மாமனாரும் - மருமகளும் காதல் வயப்பட்டு இருக்கின்றனர்.
ஒருகட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழ்ந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவத்தன்று உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்காமல் கைலாஷ் யாதவ் பூஜாவை கோவிலில் (70 aged Father In Law 28 Aged Daughter In Law Married) வைத்து தாலிகட்டி திருமணம் செய்துகொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான பின்னரே பலருக்கும் உண்மை தெரியவந்துள்ளது.