Accident File Pic | Madura Additional SP Singh (Photo Credit: Pixabay / @ANI Twitter)

செப்டம்பர் 16, மதுரா (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டம், டெல்லி - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் இன்று பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கார் - கனகர லாரி வாகனங்கள் மோதிக்கொண்டன.

உத்திரப்பிரதேசத்தின் அலிகார்க் பகுதியில் இருந்து கோகிலாவன் தாம் ஷானி கோவிலுக்கு குடும்பத்தினர் தங்களின் காரில் பயணம் செய்தனர். அப்போது, காரும் - கனகர லாரியும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டு விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த நிஷித், அலோக் மற்றும் ஆகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பீகாரை சேர்ந்த லாரி ஓட்டுநர் அஜித் என்பவரும் நிகழ்விடத்திலேயே பலியாகினர். Kim Arrives Vladivostok: அணு ஆயுதங்கள் வைத்துள்ள கப்பற்படைத்தளத்திற்கு கிம்மை நேரில் அழைத்து சென்ற ரஷ்யா; அலறும் உலக நாடுகள்..! 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

விபத்து குறித்து மதுரா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மார்தாண்ட் சிங் தெரிவிக்கையில், "நள்ளிரவு 1 மணியளவில் விபத்து நடந்துள்ளது. டெல்லி - ஆக்ரா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தபா அருகே விபத்து நடந்தது.

காரில் பயணம் செய்த 3 பேர் இறந்துவிட்டனர். 2 பேர் படுகாயம் அடைந்தனர். லாரியை நிறுத்திவிட்டு சாப்பிட சாலையை கடந்து வந்த மற்றொரு லாரி ஓட்டுனரும் விபத்தில் பலியாகினர்" என தெரிவித்தார்.