Uttar Pradesh Man Torture (Photo Credit: Twitter)

ஜூன் 17 (Uttar Pradesh News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள புலன்ட்சாஹர் (Bulandshahr, Uttar Pradesh) பகுதியை சேர்ந்தவர் சகேல். இவரின் மகன் சாஹில். சம்பவத்தன்று சாஹில் தனது நண்பர்களுடன் சேர்ந்து திருட்டு வேலையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, அவரின் நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றுவிட, சாஹில் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து, சாஹிலை மரத்தில் கட்டிவைத்த நபர்கள், அவரை கடுமையாக தாக்கி தலை முடியை அரைகுறையாக மொட்டையடித்து துன்புறுத்தி இருக்கின்றனர்.

இந்த விஷயம் தொடர்பான விடியோவை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து சாஹிலை சிறைக்கு செல்ல வைத்துள்ளனர்.

இந்த தகவலை அறிந்த சாஹீலின் தந்தை தனது மகனை துன்புறுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி சாஹிலை துன்புறுத்திய ஒருவரை கைது செய்தனர்.

விசாரணையில் சாஹில் திருட்டு செயலில் ஈடுபட்டது உறுதியானாலும், அவரை துன்புறுத்திய வீடியோ ஆதாரத்தின் பேரில் எதிர்தரப்பின் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.