ஆகஸ்ட் 04, உத்தரகாண்ட்: வரத்து குறைவு, பருவமழையால் அழிந்துபோன விளை நிலங்கள் உட்பட பல்வேறு காரணங்களால் தக்காளி உட்பட அத்தியாவசிய காய்கறிகளின் விலை இந்தியாவில் கடும் உயர்வை சந்தித்துள்ளது. தக்காளியின் விலை மாநிலமெங்கும் உச்சத்தில் இருப்பதால் மக்கள் பெரும் கவலைபட தொடங்கியுள்ளனர்.
இந்தியாவின் வடக்கில் அமைந்துள்ள உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை அடிவாரம் மற்றும் அம்மலைத்தொடர்களின் மீது அமைந்துள்ள காரணத்தால், அங்கு விளைநிலங்கள் ஏதும் இல்லை. இதனால் காய்கறிகள் உத்திரபிரதேசம் உட்பட பல சமவெளி பகுதிகளில் இருந்து கொண்டு செல்லப்பட வேண்டும்.
இதனால் அங்கு காய்கறிகள் உட்பட பிற பொருட்களின் விலை இயல்பாகவே அதிகமாக இருக்கும். இந்நிலையில், தற்போதைய தக்காளி பிரச்சனை அங்கு பெரும் விஸ்வரூபம் எடுத்து, கிலோவுக்கு ரூ.300 வரை விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் மொத்த விற்பனை கடைகளில் கிலோ தக்காளி விலை ரூ.140 க்கு அதிகபட்சமாக விற்பனை செய்யப்பட்டது. Coimbatore: மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரால் பரபரப்பான கோவை ஆட்சியர் அலுவலகம்; பொதுமக்கள் மீது சரமாரி தாக்குதல்.!
ஒரே வாரத்தில் அங்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை ரூ.240-ல் இருந்து ரூ.300 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை உயர்வு குறித்து கருத்து தெரிவித்த காளிந்தி பகுதியை சேர்ந்த ரஞ்சனா குமாரி என்ற பெண்மணி, "தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சந்தைக்குள் நுழைந்தால் தக்காளியை போல பிற அத்தியாவசிய காய்கறிகளின் விலையும் அதிகரித்து இருப்பது உறுதியாகிறது. மக்களின் நிலையை அரசு கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்" என கேட்டுக்கொண்டார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு சந்தையிலும் தக்காளி வரத்து என்பது குறைந்துள்ளது.
அம்மாநிலத்தின் மொத்த தக்காளி தேவை 32,000 டன் என்ற நிலையில், அவர்களுக்கு 2,500 டன் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. கிட்டத்தட்ட 82% தக்காளியின் வருகை தடைபட்டுள்ளதால் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக அங்குள்ள சந்தைகளில் வியாபாரம் செய்யும் விற்பனையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
டெஹ்ராடூனுக்கு மட்டும் நாளொன்றுக்கு 2,000 குவிண்டால் தக்காளி தேவைப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலைமையில் அங்கு 319 குவிண்டால் மட்டுமே தக்காளி விநியோகம் செய்யப்படுகிறது. இந்திய அளவில் தக்காளியை அதிகளவு விநியோகம் செய்யும் பெங்களூர், மகாராஷ்டிரா, ஹிமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் மழை, காலநிலை மாற்றம் கரன்னமாக தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் இங்கிருந்து செல்லவேண்டிய தக்காளிகள் ஏற்றுமதி செய்யப்படாமல் மக்களை பல இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது. தக்காளியின் தட்டுப்பாடுக்கு முன் அதனை விவசாயிகள் விளைவித்து வயிற்றில் அடித்து கீழே வீசிச்சென்ற நிலையில், இன்று அவை தங்கத்தின் மதிப்பை காட்டிலும் உயர்வாக கருதப்படுகிறது.