ஆகஸ்ட் 04, கோவை (Coimbatore News): கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பின்புறத்தில் கருவூல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று அக்கருவூல அலுவலகத்தின் மேற்கூரையில் ஏறிய வடமாநில இளைஞர், அங்கிருந்த பொதுமக்களின் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்.
அலுவலகத்தின் மேற்கூரையில் இருந்தவாறு சட்டையின்றி, அங்கிருந்த ஓடுகள், கற்கள், குழாய்களை கொண்டு மக்கள் மீது தூக்கி எரிந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலினால் பதறிப்போன மக்கள், உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், விரைந்து வந்து இளைஞரை மடக்கி பிடித்து கயிறு கொண்டு கை-கால்களை கட்டி கீழே இறக்கினர். வடமாநில இளைஞர் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் லேசான காயமும் அடைந்தார். Watch Groom Loses Balance: விழா மேடையில் உற்றார்-உறவினர்கள் முன் அசிங்கப்பட்ட மாப்பிள்ளை; மணப்பெண்ணை தூக்க முயற்சித்து கலகலப்பு..!
இதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வடமாநில இளைஞரின் உடலிலும் சிறுசிறு காயங்கள் இருந்ததால் அவரும் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காவல் துறையினர் சிகிச்சைக்கு பின்னர் வடமாநில இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த விகாஷ் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இதனால் அவரின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். வடமாநில இளைஞர் நடத்திய திடீர் தாக்குதலால் சிறிது நேரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது. வடமாநில இளைஞர்கள் வேலையாக வெளியூர் வரும்போது சில நேரம் கஞ்சா போன்ற பழக்கம் கொண்டவர்கள் தங்களுடன் அதனை எடுத்து வருகின்றனர்.
அவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு இவ்வாறான செயலில் ஈடுபடும் சூழலும் இருக்கிறது. அதே நேரத்தில், தாங்கள் திரைமறைவில் எடுத்து வந்த கஞ்சா இருப்பு காலியானதும், அவை தமிழகத்தில் எளிதில் கிடைக்காமல் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதும் நிகழ்கிறது. இதனால் அதிகாரிகள் உரிய சோதனையில் ஈடுபட்டு, அவர்களை மறுவாழ்வு மையத்தில் சேர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது.
வீடியோ நன்றி: தமிழ்நாடு பத்திரிகை மற்றும் ஊடக நிருபர்கள் சங்கம்